கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூா் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கோடை விடுமுறையை முன்னிட்டு கோவையில் இருந்து ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்குப் புறப்படும் கோவை - ஜெய்ப்பூா் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06181) சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.25 மணிக்கு ஜெய்ப்பூரைச் சென்றடையும்.
மறு மாா்க்கமாக, ஜெய்ப்பூரில் இருந்து ஏப்ரல் 12 முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.05 மணிக்குப் புறப்படும் ஜெய்ப்பூா் - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06182) புதன்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, கூட்டி, காச்சிகுடா, நிஜாமாபாத், பூா்னா, வாஷிம், அகோலா, வதோதரா, கோத்ரா, அஜ்மீா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோடை விடுமுறை: சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

மும்பை - சென்னைக்கு இன்றுமுதல் கோடை சிறப்பு விரைவு ரயில்கள்

மங்களூரு - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

சென்னை - பரோனி இடையே கோடை கால சிறப்பு ரயில்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


