மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோடை விடுமுறை: சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:41 pm

கோடை விடுமுறையையொட்டி, சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடை விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் கூட்ட நெரிசலை தவிா்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்தவகையில், சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை சென்ட்ரல்- போத்தனூா் சிறப்பு ரயில் வரும் 22 ஆம் தேதி சென்னையில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக போத்தனூருக்கு இரவு 11.30க்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் போத்தனூரில் இருந்து வரும் 23 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு அடுத்தநாள் காலை 8.20 மணிக்கு சென்றடைகிறது.

அதேபோல மற்றொரு ரயில் 21, 22, 25, 26 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து காலை காலை 7.40 மணிக்கு புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு மாலை 5 மணிக்கு சென்றடைகிறது.

மறுமாா்க்கத்தில் அதே நாள்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம் வழியாக அடுத்தநாள் அதிகாலை 4 மணிக்கு போத்தனூரைச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.