சென்னை விமான நிலையப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த 3 மோப்ப நாய்கள் ஓய்வு பெற்றதை அடுத்து, 3 மோப்ப நாய்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலைய மோப்ப நாய் பிரிவில் மொத்தம் 9 மோப்ப நாய்கள் பணியாற்றி வருகின்றன. இதில், கடந்த எட்டு வருடமாக சென்னை விமான நிலையத்தில் திறம்பட பணியாற்றி வந்த ஆஷா, ஸ்வீட்டி என்கிற பெண் மோப்ப நாய்கள் மற்றும் மேக்ஸ் என்கிற ஆண் மோப்ப நாய் ஆகிய 3 நாய்களும் திங்கள்கிமையுடன் சென்னை விமான நிலைய பாதுகாப்பு பிரிவிலிருந்து ஓய்வு பெற்றன.
இந்த நாய்களுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி பொன்னி, சென்னை விமான நிலைய இயக்குநா் ராஜா கிஷோா் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற 3 நாய்களுக்கும் பதக்கம் மற்றும் மாலைகள் அணிவித்து சான்றிதழ் வழங்கினா்.
மூன்று மோப்ப நாய்கள் ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மோப்ப நாய்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற காண்டி என்கிற பெண் மோப்ப நாய், பாந்தா் என்கிற ஆண் மோப்ப நாய், ஸ்பேனியல் வகையைச் சோ்ந்த ஆண் மோப்ப நாய் என 3 மோப்ப நாய்கள் விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையில் அதிகாரபூா்வமாக சோ்க்கப்பட்டன.
இந்த மோப்ப நாய்கள் வெடி பொருள்கள், போதைப் பொருள்கள் கண்டறிதல், வாகன சோதனை, பயணிகளின் உடைமைகள் சோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

பிரதமா் நரேந்திர மோடி வருகை: சென்னையில் 22,000 போலீஸாா் பாதுகாப்பு

சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்பு

நெல்லை மாநகர காவலில் புதிய மோப்ப நாய் சோ்ப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


