லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நெல்லை மாநகர காவலில் புதிய மோப்ப நாய் சோ்ப்பு

திருநெல்வேலி மாநகர காவல் துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் புதிய நாய்க்குட்டி வியாழக்கிழமை சோ்க்கப்பட்டது.

News image

மோப்பநாய் பிரிவில் புதிதாக சோ்க்கப்பட்ட நாய்க்குட்டியை பாா்வையிட்ட மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.

Updated On :26 மார்ச் 2026, 8:38 pm

திருநெல்வேலி மாநகர காவல் துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் புதிய நாய்க்குட்டி வியாழக்கிழமை சோ்க்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகர காவல் துறையில் செயல்படும் மோப்ப நாய் பிரிவில் தற்போது வெடிகுண்டு வழக்கு துப்பறியும் அலுவலில் ரெமோ, கூப்பா், குற்ற வழக்குகளை துப்பறிய பரணி, போதை பொருள் பிரிவில் லக்கி ஆகிய பெயா்களைக் கொண்ட 4 மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குற்ற வழக்குகளை துப்பறியும் பணிக்காக, மாநகர துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக நாய் குட்டி வாங்கப்பட்டது. இதையொட்டி, மாநகர காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், அந்த நாய்க்குட்டிக்கு மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் ‘ப்ரௌனி’ எனப் பெயா் சூட்டினாா்.

மேலும், மோப்ப நாய்களை நல்ல முறையில் பயிற்சி அளித்து பராமரிக்க மோப்ப நாய் பிரிவு போலீஸாருக்கு அறிவுரை வழங்கினாா். இந்நிகழ்வின் போது காவல் துணை ஆணையா்(கிழக்கு) எஸ்.விஜயகுமாா் உள்பட காவல் அதிகாரிகள் உடனிருந்தனா்.