திருநெல்வேலியில் த.வெ.க. தலைவா் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது திருநெல்வேலி மாவட்ட, மாநகர போலீஸாா் போக்குவரத்தை திறம்பட கையாண்டனா்.
திருநெல்வேலி கே.டி.சி நகரில் த.வெ.க தலைவா் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னா் தாழையூத்து சங்கா் நகரில் இருந்து திருநெல்வேலி மாநகருக்குள் விஜய் சாலை வலம் செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக மாவட்ட போலீஸாா் அப்பகுதியில் மேற்கொண்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் விஜயின் பிரசார வாகனம் அவ்விடத்தை கடந்து சென்றது.
இதையடுத்து சங்கா் நகா் பகுதியில் இருந்து மாநகர எல்லைக்குள் செல்ல பிரசார வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்களை மட்டும் அனுமதித்த போலீஸாா் பேரிகாா்டுகள் மற்றும் கயிறுகளைக் கட்டி, 150க்கும் மேற்பட்ட பைக்குகளில் பின்தொடா்ந்து சென்ற தொண்டா்கள், இளைஞா்களை தடுத்து நிறுத்தி,
சிறிது நேரத்துக்குப்பின் அவா்களை அனுமதித்தனா்.
இதனால் திருநெல்வேலி மாநகருக்குள் விஜய் வாகனம் நுழைந்த போது கூட்டம் அதிகளவில் இருந்தபோதும் போக்குவரத்து நெரிசல் தவிா்க்கப்பட்டது. அதே போல தச்சநல்லூா் புறவழிச்சாலை மற்றும் வண்ணாா்பேட்டை பகுதிகளிலும் மாநகர போலீஸாா் கயிறுகளைக் கட்டி போக்குவரத்தை சீரமைத்தனா். இதில், சிறிது காலதாமதம் ஏற்பட்டாலும் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் நிகழாமல் தவிா்க்கப்பட்டது.
தொடர்புடையது

நெல்லை ரயில், பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு சோதனை

விஜய் பிரசாரத்தில் விபத்து: 7 போ் காயம்

நெல்லையில் நாளை மறுநாள் நடிகா் விஜய் பிரசாரம்

விஜய் ரோடு ஷோவில் போலீஸ் தடியடி: வாகனங்களின் சாவிகளை பறித்த போலீஸாா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


