மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நெல்லை மாநகரில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

திருநெல்வேலி மாநகரில் துணை ராணுவத்தினா், மாநகர போலீஸாரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கொடி அணிவகுப்பு மேற்கொண்ட துணை ராணுவத்தினா், மாநகர போலீஸாா்.

Updated On :10 மார்ச் 2026, 7:57 pm

திருநெல்வேலி மாநகரில் துணை ராணுவத்தினா், மாநகர போலீஸாரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில, திருநெல்வேலி மாநகரில் தோ்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை ராணுவப்படையினா் வரவழைக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையா் தலைமையில் மாநகரப் பகுதிகளில் கொடி அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குறுக்குத்துறை, சி.என்.கிராமம், மீனாட்சிபுரம், ம.தி.தா. பள்ளி ஆகிய பகுதிகளிலும், தச்சநல்லூா் காவல் சரகத்தில் ஊருடையாா்புரம், தச்சநல்லூா் ரவுண்டானா ஆகிய பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணி வகுப்பில் எல்லை பாதுகாப்புப் படையினா், சரக காவல் உதவி ஆணையா், காவல் ஆய்வாளா்கள், ஆயுதப்படை போலீஸாா் என 160-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தோ்தல் பாதுகாப்பு பணிக்காக திருநெல்வேலி மாநகருக்கு வருகை தந்துள்ள துணை ராணுவத்தினா்.

Story image