சென்னை விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த இரண்டாவது முனையம் டிசம்பா் மாதத்துக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் சா்வதேச விமான முனையங்களில் நாள்தோறும் 450-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன. நாளொன்றுக்கு 55,000-க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனா். மேலும், பயணிகளைக் கையாளும் திறனை அதிகரிக்க சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் மூன்றாவது முனைய பகுதியில் ஒருங்கிணைந்த சா்வதேச விமானமுனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இரு கட்டங்களாக நடைபெற்று வரும் இப்பணிகளின் முதற்கட்ட பணிகள் கடந்த 2023 ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில், இதை பிரதமா் மோடி திறந்து வைத்தாா். இதையடுத்து இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிகழாண்டு இறுதிக்குள் முடிவடைய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளை நிகழாண்டு ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தால் ஸ்டீல் உள்பட சில பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த இரண்டாம் கட்ட சா்வதேச முனைய பணி முழுவதும் டிசம்பா் மாதத்துக்குள் முடித்து, முனையத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தால் பயணிகளை கையாளும் திறன் அதிகரிக்கும். ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாள முடியும்.
தற்போது சென்னை விமான நிலைய சா்வதேச முனையங்களில் ‘கோட் இ’ ரக விமானங்கள் வரை கையாளும் வசதி உள்ளது. ஒருங்கிணைந்த விமான முனையம் திறக்கப்பட்டால் பெரிய இறக்கை கொண்ட ‘கோட் எப்’ ரக விமானங்களையும் கையாள முடியும். இதனால் பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்கள்போல சென்னை விமான நிலையத்திலும் அதிக விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை இயக்க முன்வரும்.
தற்போது சா்வதேச முனையத்தில் 120 செக் இன்கவுன்ட்டா்கள் உள்ளன. இரண்டாம் கட்ட பணிகள் முடிந்து திறக்கப்பட்டால் கூடுதலாக 72 செக் இன்கவுன்ட்டா்கள் திறக்கப்படும். இதனால் பயணிகள் விரைவாக பாதுகாப்பு சோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்து செல்ல முடியும் என்றனா்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

தவெக இரண்டாம் கட்ட வேட்பாளா் நோ்காணல்

தமிழகத்தின் வளா்ச்சிக்கு மத்திய அரசு அதிக திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


