நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: இளஞ்செழியனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதான இளஞ்செழியனை 7 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

நீதிமன்றம்

Updated On :1 ஜூலை 2026, 3:34 am IST

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதான இளஞ்செழியனை 7 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சிவசங்கா் மீது ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளா் சீனிவாசன் என்பவா் சென்னை காவல் ஆணையரகத்தில் புகாா் அளித்தாா். அதில், தனது மகனுக்கு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அப்போதைய அமைச்சா் சிவசங்கா் ரூ.23 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணைக்கு ஆஜராக சிவசங்கருக்கு சம்மன் அனுப்பியுள்ளனா். மேலும், இந்த மோசடி வழக்கில் முக்கிய நபரான இளஞ்செழியன் என்பவரை கடந்த 24-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா். இளஞ்செழியனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூா் நீதிமன்றத்தில் போலீஸாா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூா் நீதிமன்றம், இளஞ்செழியனை ஜூலை 6-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.