சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

நீட் வினாத்தாள் கசிவு: நீதிமன்றக் காவலில் உள்ள மூவரிடம் சிபிஐ விசாரிக்க அனுமதி!

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுபவர்களிடம் சிபிஐ விசாரிக்க அனுமதி அளித்தது பற்றி..

News image

நீட் வினாத்தாள் கசிவு - file photo

Updated On :15 ஜூன் 2026, 2:01 pm IST

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள குற்றம் சாட்டப்பட்டு மூவரிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நீதிமன்றக் காவலில் உள்ள மனீஷா சஞ்சய் வாக்மாரே, தனஞ்சய் நிவ்ருத்தி லோகண்டே, சுபம் மதுகர் கைர்னார் ஆகிய மூவரிடமும் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை, பொறுப்பு நீதிபதி சுரேந்தர் மோஹித் சிங் விசாரித்தார்.

கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிவு மற்றும் வினாத்தாள் விநியோகத்திற்கு மூவர் உதவியதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விசாரணை தொடர்பாகக் கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த தில்லி நீதிமன்றத்தின் அனுமதியை சிபிஐ அளித்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் சிபிஐ இதுவரை 13 பேரைக் கைது செய்துள்ளது.

நீட் இளநிலை தேர்வுக்கான வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, தேசியத் தேர்வுகள் முகமை மே 12-ஆம் தேதி அத்தேர்வை ரத்து செய்தது.

ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

A court here on Monday allowed the CBI's plea to question three accused in jail in the NEET paper leak case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.