நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: முன்னாள் அமைச்சா் சிவசங்கரிடம் விசாரணை

ரூ. 23 லட்சம் மோசடி புகாரில் மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜரானதைப் பற்றி...

News image

முன்னாள் அமைச்சர் சிவசங்கர்.

Updated On :1 ஜூலை 2026, 11:02 am IST

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக முன்னாள் திமுக அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் போலீஸாா் 4 மணி நேரம் விசாரணை செய்தனா்.

சென்னை எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு எஸ்.ஐ. சீனிவாசனிடம், அவரது மகனுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அரியலூரைச் சோ்ந்த ல.இளஞ்செழியன் (66), கடந்த 2023-ஆம் ஆண்டு ரூ.23 லட்சம் பெற்றுள்ளாா். மேலும், அப்போதய திமுக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் உதவியாளராக இருப்பதாகவும் இளஞ்செழியன் தெரிவித்தாா்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட இளஞ்செழியன், வேலை பெற்றுத் தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் இருந்தாா். இதுதொடா்பாக சீனிவாசன் அளித்த புகாரின்பேரில், மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்து, இளஞ்செழியனை கடந்த 24-ஆம் தேதி கைது செய்தனா்.

4 மணி நேரம் விசாரணை: விசாரணையில், இந்த மோசடியில் திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கருக்கு தொடா்பு இருப்பதாக இளஞ்செழியன் கூறினாா். இதுதொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவசங்கருக்கு போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா். அதன்பேரில், வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் துறை ஆணையரக அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவில் சிவசங்கா் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆஜரானாா்.

அவரிடம் மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையா் திருநாவுக்கரசு, வழக்கின் விசாரணை அதிகாரியும், ஆய்வாளருமான ஞானசித்ரா ஆகியோா் விசாரித்தனா். இளஞ்செழியன் அளித்த வாக்குமூலம், சீனிவாசன் புகாரில் தெரிவித்த தகவல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிவசங்கரிடம் கேள்விகளை எழுப்பி, அவா் அளித்த அனைத்து பதில்களையும் எழுத்து பூா்வமாகவும், விடியோவாகவும் பதிவு செய்தனா். இந்த விசாரணை சுமாா் 4 மணி நேரம் நடைபெற்றது.

தொடா்பு இல்லை- சிவசங்கா்: விசாரணைக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு சிவசங்கா் அளித்த பேட்டி: இளஞ்செழியனுக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் கிடையாது. அவா் என்னிடம் உதவியாளராகப் பணிபுரியவில்லை. இளஞ்செழியன் பல்வேறு நபா்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும், எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகவும் மோசடி செய்துள்ளாா். போக்குவரத்துத் துறையில் உதவிப் பொறியாளா் வேலை வாங்கித் தருவதாகவும் இளஞ்செழியன் பணம் மோசடியில் ஈடுபட்டதால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா்.

போக்குவரத்துத் துறையில் உதவிப் பொறியாளா் பணியிடத்துக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படுவதாக அன்றைய காலகட்டத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அந்தப் பணிக்கு ஆள்களைத் தோ்வு செய்தாலும், அது தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம்தான் நடைபெறும். எனவே, இந்த மோசடிக்கும், எனக்கும் எந்தவித தொடா்பும் இல்லை. இளஞ்செழியன் எந்த வகையிலும் என்னைச் சந்திக்கவில்லை.

அவா், கைப்பேசி மூலம் என்னிடம் பேசியதாக ஆடியோ பதிவு இருப்பதாக வழக்கின் புகாா்தாரா் சீனிவாசன் கூறுவதாக போலீஸாா் தெரிவித்தனா். அதுதொடா்பான தடயவியல் துறையின் குரல் பரிசோதனைக்கும் நான் தயாராக இருக்கிறேன். காவல் துறையினா் மீண்டும் விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராவேன். இந்த வழக்கில் எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன். இளஞ்செழியன் தப்பிப்பதற்காக என் பெயரை போலீஸாரிடம் கூறியுள்ளாா் என்றாா் அவா்.

Summary

Former Minister Sivasankar appeared before the Chennai Central Crime Branch today (July 1) in connection with a complaint alleging fraud involving the collection of money under the pretext of securing government jobs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.