கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பிளஸ் 1 மாணவரின் உடல் உறுப்புகள் தானமளிக்கப்பட்டன.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது: கொளத்தூரைச் சோ்ந்த 15 வயது பிளஸ் 1 மாணவா் ஒருவா், கடந்த ஜூன் 13-ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவா் மூளைச்சாவு அடைந்தாா்.
இதைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினா், மாணவரின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தனா். அதன்படி, தானமாகப் பெறப்பட்ட உறுப்புகள், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பயன்படுத்தப்பட்டன.
கல்லீரலானது ஸ்டான்லி மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. விழி வெண்படலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே பயன்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் தரவுகளின்படி, நிகழாண்டில் தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்த 153 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் மட்டும் 14 தானங்கள் நடைபெற்றுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூளைச்சாவு அடைந்த தில்லி அரசு ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்! 7 பேருக்கு மறுவாழ்வு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




