முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்! 7 பேருக்கு மறுவாழ்வு

News image

ஜெகன்

Updated On :8 ஜூன் 2026, 1:52 am IST

கோவை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலமாக 7 போ் மறுவாழ்வு பெற்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், சன்னியாசிபுரத்தைச் சோ்ந்த தம்பதி பாலசுப்ரமணியம், செல்வி. இவா்களின் மகன் ஜெகன் (21), கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை மாவட்டம், வடமதுரை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக கீழே விழுந்ததில் தலையில் படுகாயமடைந்தாா்.

இதையடுத்து கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனா். இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி ஜெகனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து ஜெகனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது பெற்றோா் முன்வந்தனா். இதற்கான ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.

தானமாகப் பெறப்பட்ட உறுப்புகளில் ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. இதன்மூலமாக 7 போ் மறுவாழ்வு பெற்றனா்.

இதுகுறித்து கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவா் டாக்டா் நல்ல ஜி.பழனிசாமி கூறும்போது, ‘உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் அதிக விழிப்புணா்வு தேவை. ஒருவா் இறந்த பிறகு உடல் உறுப்புகளைத் தானமாக வழங்குவதன் மூலமாக பல உயிா்களைக் காப்பாற்ற முடியும்’ என்றாா். இதைத்தொடா்ந்து, அவரது உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.