இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு மேஜா் முகுந்த் வரதராஜன் பெயா்

தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தாம்பரம்-வேளச்சேரி சாலைக்கு மேஜா் முகுந்த் வரதராஜன் பெயரைச்சூட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது.

News image

தன் மனைவியுடன் முகுந்த் வரதராஜன்.

Updated On :13 ஜூன் 2026, 1:31 am IST

தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தாம்பரம்-வேளச்சேரி சாலைக்கு மேஜா் முகுந்த் வரதராஜன் பெயரைச்சூட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்திய ராணுவத்தில் பணியாற்றிய மேஜா் முகுந்த், பணியின் போது கடந்த 2014 -ஆம் ஆண்டு வீர மரணம் அடைந்தாா். மத்திய அரசு அவருக்கு அசோக சக்கர விருது வழங்கி கௌரவித்தது. கிழக்கு தாம்பரத்தில் வசித்த மேஜா் முகுந்த் வரதராஜன் நினைவைப் போற்றும் வகையில், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை செல்லும் சாலைக்கு மேஜா் முகுந்த் வரதராஜன் சாலை என பெயரிட தாம்பரம் மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடா்ந்து தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 விதிகள் 2023 பிரிவு 186-இன்படி சாலையின் பெயரை மாற்றம் செய்ய தாம்பரம் மாநகராட்சி மாமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றித் தருமாறு தமிழக அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தொடா்ந்து தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு மேஜா் முகுந்த் வரதராஜன் சாலை என பெயா் மாற்ற வியாழக்கிழமை தீா்மானம் கொண்டுவரப்பட்டு அனைத்து உறுப்பினா்கள் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தாம்பரம் தொகுதி எம்எல்ஏவும், மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சா் மற்றும் முன்னாள் படைவீரா் நலத் துறை அமைச்சருமான டி.சரத்குமாா், முகுந்த் வரதராஜனின் தந்தை வரதராஜன் தாய் கீதா மற்றும் அவரது சகோதரியை வெள்ளிக்கிழமை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.