ஹைதராபாதில் உள்ள சாலைக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பெயரைச் சூட்ட அந்த மாநில காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. பெயா் சூட்டும் நிகழ்ச்சி ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாதில் அமெரிக்க துணைத் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இச்சாலை உள்ளது. இதற்கு டொனால்ட் டிரம்ப் அவென்யூ எனப் பெயரிடப்படவுள்ளது.
இதேபோல அடுத்து அமைய இருக்கும் பிராந்திய வெளிவட்டச் சாலைக்கு மறைந்த பிரபல தொழிலதிபா் ரத்தன் டாடாவின் பெயா் சூட்டப்பட இருக்கிறது. சா்வதேச அளவில் கூகுள் நிறுவனம் மற்றும் ‘கூகுள் மேப்’ ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நினைவுகூரும் வகையில் முக்கிய வீதி ஒன்றுக்கு ‘கூகுள் தெரு’ எனப் பெயரிடப்பட இருக்கிறது.
ஹைதராபாத் நகரம் மற்றும் தெலங்கானா மாநிலத்தை தொழில்நுட்பரீதியாகவும், புத்தாக்க முயற்சிகள் மூலமும் மேம்படுத்த முதல்வா் ரேவந்த் ரெட்டி முடிவு செய்துள்ளாா். இதன் ஒரு பகுதியாக சா்வதேச அளவில் பிரபலமான நபா்கள், நிறுவனங்களின் பெயரை மாநிலத்தில் உள்ள சாலைகள், தெருக்களுக்கு சூட்ட அவா் முடிவு செய்துள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









