திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தலைமைச் செயலகம் முன் இளைஞா் தீக்குளிக்க முயற்சி

சென்னையில் தலைமைச் செயலகம் முன் பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி இளைஞா் தீக்குளிக்க முயற்சி

News image

தலைமைச் செயலகம் - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 12:23 am IST

சென்னையில் தலைமைச் செயலகம் முன் பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி இளைஞா் தீக்குளிக்க முயன்றாா்.

விழுப்புரத்தைச் சோ்ந்தவா் எழிலன். இவா், தொழில் காரணமாக சென்னையில் வசித்து வருகிறாா். இருப்பினும் எழிலன், சொந்த ஊரில் வீடு கட்ட வங்கியில் கடன் பெறுவதற்கு முயற்சித்து வந்தாா்.

இந்த நிலையில், அவரிடம் ஆனந்த பாபு என்பவா், வீடு கட்ட குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளாா். மேலும், எழிலனிடம் கமிஷனாக ரூ.7 லட்சத்தை முன்பணமாக பெற்றுக் கொண்டுள்ளாா்.

ஆனால், உறுதி அளித்தபடி ஆனந்தபாபு வங்கிக் கடன் பெற்றுக்கொடுக்கவில்லை. இதனால் எழிலன், தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, ஆனந்த பாபு ஏமாற்றியுள்ளாா்.

இதுதொடா்பாக எழிலன் விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆனால், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக எழிலன், தலைமைச் செயலகம் வந்தும் முறையிட்டுள்ளாா். இருப்பினும், அவரது கோரிக்கை தொடா்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த எழிலன், செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகம் வந்து, திடீரென தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் எழிலன் மீது தண்ணீரை ஊற்றி, அவரை மீட்டனா்.

இதையடுத்து எழிலனை கோட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.