தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்னை தலைமைச் செயலகம் சுற்றி புகைமூட்டம்! மக்கள் சுவாசிக்க சிரமம்!

சென்னை தலைமைச் செயலகம் சுற்றுப்புறத்தில் புகைமூட்டம் ஏற்பட்டிருப்பது பற்றி...

News image

சென்னை தலைமைச் செயலகம் சுற்றி புகைமூட்டம் - X

Updated On :2 ஜூன் 2026, 12:44 pm IST

சென்னை தலைமைச் செயலகம் சுற்றுப் பகுதிகளில் திடீர் புகைமூட்டம் ஏற்பட்டதால், அங்கிருக்கும் மக்களுக்கு சுவாசிக்க சிரமம் ஏற்பட்டது.

சென்னை தலைமைச் செயலகம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இன்று காலை 11.30 மணியளவில் திடீர் புகைமூட்டம் நிலவியது. இந்த புகைமூட்டம் காரணமாக மக்கள் சுவாசிக்க சிரமம் ஏற்பட்டது.

மேலும், அப்பகுதியில் வாகன ஓட்டிகளுக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டதால், நச்சுவாயு கலந்த புகையாக இருக்கக் கூடுமோ என்ற அச்சம் நிலவியது.

துறைமுகம் அருகே கடற்கரைப் பகுதியில் இருந்து துர்நாற்றத்துடன் புகைமூட்டம் வெளியான நிலையில், சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்களும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் விரைந்தனர்.

தலைமைச் செயலகம் அருகேவுள்ள துறைமுகப் பகுதியில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த சல்ஃபர் ரசாயனத்தில் இருந்து புகைமூட்டம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள சென்னை துறைமுகம், தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை, வெய்யில் காரணமாக வாயுவுடன் புகைமூட்டம் வெளியேறியதாக தெரிவித்துள்ளது.

இந்த சல்ஃபர் ரசாயன வெளியேற்றம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் புகைமூட்டமும் படிப்படியாக குறைந்து வருகின்றது.

Summary

Smoke Engulfs Chennai Secretariat: People Suffer from Breathlessness

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.