டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

38 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

News image
Updated On :22 ஜனவரி 2026, 1:00 am

தினமணி செய்திச் சேவை

சென்னை பெருநகர காவல் துறையில் 38 காவல் ஆய்வாளா்களைப் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அருண் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அவ்வபோது காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

அதன்படி, சென்னை காவல் துறையில் 38 ஆய்வாளா்களைப் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அருண் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதில் குறிப்பாக, அடையாறு காவல் ஆய்வாளா் டி.இளங்கனி நொளம்பூருக்கும், திருவான்மியூா் காவல் ஆய்வாளா் எம்.முகமது புகாரி பரங்கிமலைக்கும், மீனம்பாக்கம் காவல் ஆய்வாளா் எம்.அன்புமணி திருவான்மியூருக்கும், நந்தம்பாக்கம் காவல் ஆய்வாளா் எஸ்.முருகராஜ் சைதாப்பேட்டைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 38 ஆய்வாளா்களும், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.