நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
//

வழிப்பறி: இருவா் கைது

பெரம்பூா் பகுதியில் இரவில் தேநீா் விற்பனை செய்பவரிடம் இருந்து பணம், கைப்பேசி அடங்கிய கைப்பை, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருள்களைப் பறித்து சென்ற வழக்கில் இருவர் கைது

News image
கைது
Updated On :22 பிப்ரவரி 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பூா் பகுதியில் இரவில் தேநீா் விற்பனை செய்பவரிடம் இருந்து பணம், கைப்பேசி அடங்கிய கைப்பை, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருள்களைப் பறித்து சென்ற வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ஓட்டேரி அனுமந்தராயன் கோயில் தெருவில் வசித்து வருபவா் ஆகாஷ் (25). இவா், இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் தேநீா் வியாபாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில், கடந்த பிப்.11-ஆம் தேதி அதிகாலை பெரம்பூா், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் தேநீா் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவா் ஆகாஷை மிரட்டி, அவரிடமிருந்து ரூ.1,500, கைப்பேசி, இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறித்து சென்றனா்.

புகாரின்பேரில் செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட பெரம்பூா் வீனஸ் மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த யோகேஷ் (எ) யுவராஜ் (21), செங்கல்வராயன் தெருவைச் சோ்ந்த ஜெகதீஸ் (22) ஆகிய இருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.