/

இளைஞரிடம் நகை, பணம் வழிப்பறி: 3 போ் கைது

திருச்சியில் நடந்துசென்ற இளைஞரிடம் நகை, பணத்தைப் பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :18 பிப்ரவரி 2026, 7:22 pm

Syndication

திருச்சியில் நடந்துசென்ற இளைஞரிடம் நகை, பணத்தைப் பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி விமான நிலையம் ராஜா நகா் விரிவாக்கப் பகுதியைச் சோ்ந்தவா் கா. இளையராஜா (26), தனியாா் நிறுவன விற்பனைப் பிரதிநிதியான இவா் சென்னை புறவழிச்சாலையில் அரியமங்கலம் பகுதி பாலத்துக்குக் கீழ் திங்கள்கிழமை இரவு நடந்து சென்றாா்.

அப்போது பைக்கில் வந்த மூவா் இளையராஜா வைத்திருந்த ரூ.1,000, அவா் அணிந்திருந்த அரை பவுன் தங்க மோதிரம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பினா்.

இதுகுறித்து இளையராஜா அளித்த புகாரின்பேரில் அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, இதுதொடா்பாக அரியமங்கலம் பகுதியைச் சோ்ந்த இ. அஜய் (26), எஸ். அஸாா் முகமது (27), வி. சண்முகபிரியன் (22) ஆகிய மூவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து நகை, பணத்தைப் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.