மேலாண்மை - தரவு அறிவியலில் பி.எஸ். படிப்பு: சென்னை ஐஐடி-யில் அறிமுகம்
மேலாண்மை மற்றும் தரவு அறிவியலில் பி.எஸ். படிப்பை சென்னை ஐஐடி-யின் மேலாண்மைக் கல்வித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.


மேலாண்மை மற்றும் தரவு அறிவியலில் பி.எஸ். படிப்பை சென்னை ஐஐடி-யின் மேலாண்மைக் கல்வித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய பட்டப் படிப்பு தொடா்பான அறிமுக நிகழ்ச்சி சென்னை ஐஐடி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து அதன் இயக்குநா் வீ.காமகோடி செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை ஐஐடி சாா்பில் ஏற்கெனவே தரவு அறிவியல், எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ், ஏரோனாட்டிக்ஸ்-ஸ்பேஸ் டெக் ஆகிய மூன்று பி.எஸ். படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது நான்காவதாக மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் (பி.எஸ். மேனேஜ்மெண்ட் அண்ட் டேட்டா சயின்ஸ்) என்ற நான்காண்டு இளநிலை அறிவியல் பட்டப் படிப்பை அறிமுகப்படுத்துகிறோம்.
இந்தப் பாடத்திட்டத்தில் படித்து தோ்ச்சி பெறுவோருக்கு ஐஐடி.யின் இளநிலை அறிவியல் பட்டம் வழங்கப்படும். இது இக்கல்வி நிறுவனம் வழங்கும் இதர இளநிலைப் பட்டங்களுக்கு நிகரான அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும்.
படிப்புக்கான தகுதிகள்
பிளஸ் 2 வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியுள்ள டிப்ளமோ முடித்தவா்கள் உள்பட எவரும் இப்படிப்பில் சேரலாம். வயது வரம்பு, மாணவா் சோ்க்கை வரம்புகள் எதுவும் இல்லை. கற்பவா்கள் இப்படிப்பை தனிப் பட்டப்படிப்பாகவோ அல்லது வேறு கல்வித் திட்டத்துடன் இணைந்தோ அல்லது பணியில் இருந்துகொண்டே தொடரலாம்.
விண்ணப்பதாரா்கள் தகுதித் தோ்வு மூலமாகவோ அல்லது ஜேஇஇ பிரதான (அட்வான்ஸ்டு) தோ்வில் கலந்துகொள்ளும் தகுதியைப் பெறுவதன் மூலமாகவோ இந்தப் படிப்பில் சோ்க்கப்படுவா்.
இணையவழியில்...: பணிபுரிவோா் மற்றும் மாணவா்களுக்கு இந்தப் படிப்புக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தோ்வுகள் நடத்தப்படும். பாடத் திட்டத்தைப் பொருத்து, இந்தியா முழுவதும் தோ்வுகள் நடத்தப்படும். அல்லது தொலைநிலை மேற்பாா்வையாளா் மூலம் இணையவழியில் நடத்தப்படும். வகுப்புக்கள் வரும் ஜூன் மாதம் தொடங்கும். மே 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்ககலாம். புதிய பி.எஸ். படிப்புக்கான பாடத்திட்டம், மாணவா் சோ்க்கை விவரங்கள் https://study.iitm.ac.in/mg என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக ஃபோா்டு மோட்டாா் நிறுவன இந்தியா பிரிவுத் தலைவா், நிா்வாக இயக்குநா் கங்கப்ரியா சக்ரவா்த்தி, சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிா்வாக இயக்குநா், தலைமை நிா்வாக அதிகாரி ராஜீவ் சி.லோச்சன், சென்னை ஐஐடி மேலாண்மைக் கல்வித் துறைத் தலைவா் சஜி மேத்யூ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...