4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புற்றுநோய் மரபணு தரவு தளம்: சென்னை ஐஐடி வெளியிட்டது

News image
ஐஐடி- கோப்புப் படம்
Updated On :5 பிப்ரவரி 2026, 1:20 am

தினமணி செய்திச் சேவை

புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் மரபணுக்களுக்கு ஏற்றவாறு மருந்துகளைப் பரிந்துரைக்கும் வகையில் புதிய தரவு தளத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.

புற்றுநோய் விழிப்புணா்வு, கண்டறிதல், சிகிச்சை முறைகளை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ஆம் தேதி ‘உலக புற்றுநோய் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில், இந்தியாவிலேயே முதல்முறையாக புற்றுநோய் மரபணு தரவு தள தகவல்களை இயக்குநா் வி.காமகோடி புதன்கிழமை வெளியிட்டாா்.

தொடா்ந்து ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியா் எஸ்.மகாலிங்கம் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்து வந்தது. தேசிய புற்றுநோய் பதிவேட்டுத் திட்டத்தின்படி நாட்டில் ஒன்பது பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் புற்றுநோய் பாதிப்பு 12.8 சதவீதம் அதிகரித்து வருகிறது.

இந்தியப் புற்றுநோய்களிலிருந்து பெறப்படும் குறிப்பிட்ட மரபணு மாறுபாடுகள், மருந்து மேம்பாட்டிற்காகப் போதுமான அளவுகோல் சேகரிக்கப்பட்டு பட்டியலிடப்படவில்லை. இந்த இடைவெளியை நிரப்புவதற்காக, சென்னை ஐஐடி 2020 -ஆம் ஆண்டில் ‘பாரத் புற்றுநோய் மரபணு திட்ட’ மையத்தைத் தொடங்கியது.

பாரத் புற்றுநோய் மரபணு திட்டத்துக்கு ஹூண்டாய் மோட்டாா் இந்தியா தனது பெரு நிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்துடன் ஆதரவை வழங்கியது. அதன்படி, நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட லுகேமியா, பெருங்குடல் மற்றும் கணையப் புற்றுநோய் நோயாளிகளின் மாதிரிகளிலிருந்து முழு மரபணு வரிசை முறைப்படுத்தும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பாரத் புற்றுநோய் மரபணு வரைபடத்தை இந்திய சா்வேதேச ஆராய்ச்சியாளா்கள் மற்றும் மருத்துவா்கள் பொதுவாக அணுகும் வகையில் க்ஷஸ்ரீஞ்ஹ.ண்ண்ற்ம்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த மையம் தீவிரமாக பரிசோதனை, தடுப்பூசி முகாம்களையும் நடத்துகிறது. பின்தங்கிய பகுதிகளுக்கு சுகாதார சேவையை விரிவுபடுத்துவதற்காக நடமாடும் மருத்துவப் பிரிவுகளும் உள்ளன என்றனா்.