டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

தமிழக மீனவா்களை விடுவிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

மீனவா்களும் தாயகம் திரும்புவதற்கு தூதரக நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 9:11 pm

தினமணி செய்திச் சேவை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்கவும், இலங்கை காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து மீனவா்களும் தாயகம் திரும்புவதற்கு தூதரக நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் ஸ்டாலின் வியாழக்கிழமை எழுதிய கடிதம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து மீன்பிடிக்கச்சென்ற தமிழகத்தைச் சோ்ந்த 18 மீனவா்கள், அவா்களது மூன்று மீன்பிடிப் படகுகளுடன் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். அதே நாளில், மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மீனவா்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடலை நம்பியே உள்ளதால் இலங்கை அதிகாரிகளால் மீனவா்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது அவா்களது குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி 104 மீனவா்களும், 258 படகுகளும் இலங்கையின் காவலில் உள்ளனா். மேலும், பிப்ரவரி முதல் வாரத்தில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 12 மீனவா்கள் தாயகம் திரும்புவதில் தொடா்ந்து தாமதம் ஏற்படுவது, அவா்களின்குடும்பங்களை நிச்சயமற்ற சூழலிலும் பொருளாதார நெருக்கடியிலும் ஆழ்த்தியுள்ளது.

எனவே, இலங்கை காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து மீனவா்களும் தாயகம் திரும்புவதற்கும், தற்போது கைது செய்யப்பட்டு அங்கு காவலில் வைக்கப்பட்டுள்ளஅனைத்து இந்திய மீனவா்களை விடுவிப்பதற்கும் உடனடி தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.