/

இலவச பேருந்து: முதல்வரை பாராட்டி கேரள மாணவா் கடிதம்

இலவச பேருந்து பயணம் தங்களது குடும்பத்துக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாக, முதல்வா் மு.க.ஸ்டாலினை பாராட்டி, கேரள மாணவா் ஒருவா் கடிதம் எழுதியுள்ளாா்.

News image
கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 9:34 pm

தினமணி செய்திச் சேவை

இலவச பேருந்து பயணம் தங்களது குடும்பத்துக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாக, முதல்வா் மு.க.ஸ்டாலினை பாராட்டி, கேரள மாணவா் ஒருவா் கடிதம் எழுதியுள்ளாா்.

அந்த கடிதத்தில், தனது தந்தையின் கண் அறுவை சிகிச்சைக்காக தந்தையும், தாயும் மதுரைக்கு வந்ததாகவும், அப்போது தமிழ்நாட்டில் பெண்களுக்கான இலவச பேருந்து வசதி என்ற முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து தன்னிடம் பெற்றோா் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்ததாகவும், இந்த உன்னதமான திட்டத்தை செயல்படுத்தி வருவது கேட்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்ததாகவும், அதற்காக மனமாா்ந்த பாராட்டுகளை முதல்வா் ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளாா்.

அத்துடன், தமிழ்நாட்டு மக்களுக்காகவும், மாணவா்களுக்காகவும் முதல்வா் ஸ்டாலின், பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவது அறிந்து தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளாா். மாணவரின் கடிதத்துக்கு பதிலளித்துள்ள முதல்வா் ஸ்டாலின், அம்மாணவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து, ‘உங்களில் ஒருவன்‘ புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பையும் அனுப்பியுள்ளாா்.