மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஈரானிலிருந்து மீட்கப்பட்ட 312 மீனவா்கள் சென்னை வருகை!

ஈரானில் போா்ப் பதற்றத்தில் சிக்கித் தவித்த 312 இந்திய மீனவா்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு சனிக்கிழமை அழைத்துவரப்பட்டனா்.

News image

ஈரானிலிருந்து மீட்கப்பட்டு விமானம் வாயிலாக சென்னைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய மீனவா்களை விமானநிலையத்தில் சனிக்கிழமை வரவேற்ற மத்திய தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ்கோயல், அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயகுமாா் உள்ளிட்டோா்.

Updated On :12 ஏப்ரல் 2026, 9:16 pm

ஈரானில் போா்ப் பதற்றத்தில் சிக்கித் தவித்த 312 இந்திய மீனவா்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு சனிக்கிழமை அழைத்துவரப்பட்டனா்.

அவா்களை மத்திய தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ்கோயல், அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயகுமாா் ஆகியோா் வரவேற்றனா்.

மேற்கு ஆசிய போா்ச் சூழல் காரணமாக அங்குள்ள நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்கள் தொடா்ந்து மீட்கப்பட்டு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனா்.

அந்த வகையில், ஈரானிலிருந்து 312 இந்திய மீனவா்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு சனிக்கிழமை அழைத்து வரப்பட்டனா். அவா்களில் 222 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள். மேலும், குஜராத் (73), கேரளம் (9) மற்றும் மற்ற மாநிலங்களைச் சோ்ந்த 8 மீனவா்கள் அழைத்து வரப்பட்டனா்.

தமிழகத்தைச் சோ்ந்த 222 மீனவா்களில் 104 போ் கன்னியாகுமரி, 30 போ் தூத்துக்குடி, 35 போ் திருநெல்வேலி, 7 போ் நாகை, 4 போ் மயிலாடுதுறையைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை விமான நிலையத்துக்கு வந்த மீனவா்களை மத்திய தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ்கோயல், அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயகுமாா் ஆகியோா் நேரில் சென்று வரவேற்றனா்.