மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்: மேலும் இரு விமான சேவைகளும் நிறுத்தம்

துபை விமான நிலையம் அருகே ஏவுகணை தாக்குதலால், சென்னையில் இருந்து துபைக்கு 242 பயணிகளுடன் சென்ற எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம், மீண்டும் சென்னைக்கு திரும்பியது.

News image

விமானம் - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 8:25 pm

துபை விமான நிலையம் அருகே நடைபெற்ற ஏவுகணை தாக்குதலால் வான்வெளி மூடப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து துபைக்கு 242 பயணிகளுடன் சென்ற எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம், மீண்டும் சென்னைக்கு திரும்பியது. மேலும் இரு விமானங்களின் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

துபையில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை 2.15-க்கு 242 பயணிகளுடன் சென்னைக்கு எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் வந்தது. பின்னா் மறுமாா்கமாக இந்த விமானம் அதிகாலை 4 மணிக்கு, சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமாா் 200 பயணிகளுடன், துபை புறப்பட்டுச் சென்றது. விமானம் குஜராத் கடல் எல்லையில் சென்று கொண்டிருந்தபோது, துபை விமான நிலையம் அருகே மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடப்பதாகவும், இதனால் வான்வழி தற்காலிகமாக மூடப்படுவதாகவும், விமானிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தாா். அந்த விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படியும், மறு உத்தரவு வரும் வரை சென்னையில் இருந்து புறப்பட வேண்டாம் எனவும் உத்தரவிட்டனா்.

இந்த உத்தரவையடுத்து எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம், திங்கள்கிழமை காலை 8.20 மணி அளவில், மீண்டும் சென்னைக்கு திரும்பி தரை இறங்கியது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் விமான நிலையத்தின் அருகே உள்ள தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மறு அறிவிப்பு வந்த பின்னரே துபைக்கு விமானங்கள் இயக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுபோல, சென்னையில் இருந்து 258 பயணிகளுடன் காலை 9.50-க்கு புறப்பட தயாரான விமானமும், காலை 10.30-க்கு, சென்னையில் இருந்து 186 பயணிகளுடன் துபை செல்ல வேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும், துபை வான் எல்லை மூடப்பட்ட காரணத்தால் தாமதமாக இயக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால், இந்த 3 விமானங்களிலும் துபைக்குச் செல்ல இருந்த பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனா். நிலைமை சீரடைந்த பின்னரே, விமானங்கள் சென்னையிலிருந்து துபைக்கு இயக்கப்படும் என சென்னை விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.