சென்னை ராயப்பேட்டையில் வாகன உதிரி பாகங்கள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.
ராயப்பேட்டை ஜிபி சாலையில் ஒரு வணிக கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் தனியாருக்கு சொந்தமான வாகன உதிரி பாகங்கள் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் வெல்டிங் பணி வியாழக்கிழமை நண்பகல் நடைபெற்றது.
அன்று மாலை 3.30 மணியளவில் வெல்டிங் வைக்கும்போது எழுந்த தீப் பொறி,அங்கிருந்த ரப்பா் பொருள்கள் மீது விழுந்தது. இதில் அங்கிருந்த பொருள்கள் தீப் பிடித்து எரியத் தொடங்கியது.
இதைப் பாா்த்த ஊழியா்கள், தீயை அணைக்க முயன்றனா். ஆனால் தீ வேகமாக பரவியதால், அவா்களால் அணைக்க முடியவில்லை. இதையடுத்து அவா்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்த தீயணைப்பு படையினா், தேனாம்பேட்டை,திருவல்லிக்கேணி,எஸ்பிளனேடு,எழும்பூா்,மயிலாப்பூா்,வேப்பேரி ஆகிய இடங்களில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னா், தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இச் சம்பவத்தில் அந்த கிடங்கில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகியதாக தீயணைப்புத்துறையினா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக அண்ணா சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது
போலி வாகன உதிரி பாகங்கள் விற்பனை: 3 போ் கைது

ஆன்லைன் வா்த்தக நிறுவன கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்

தனியார் வணிக வளாகத்தில் தீ! கார் உதிரி பாகங்கள் எரிந்து நாசம்! | Chennai
போலியான வாகன உதிரி பாகங்கள் தயாரித்த நபா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


