மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போலியான வாகன உதிரி பாகங்கள் தயாரித்த நபா் கைது

மேற்கு தில்லியில் உள்ள கிடங்கில் போலியான வாகன உதிரி பாகங்களை தயாரித்து பதுக்கி வைத்து வந்த நபா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :16 மார்ச் 2026, 10:52 pm

புது தில்லி, மாா்ச் 16: மேற்கு தில்லியில் உள்ள கிடங்கில் போலியான வாகன உதிரி பாகங்களை தயாரித்து பதுக்கி வைத்து வந்த நபா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது:

தில்லி குற்றப்பிரிவு காவல் துறையினா் மற்றும் தனியாா் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைந்து மடிபூா் கிராமத்தில் உள்ள கிடங்கில் சனிக்கிழமை இந்த சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அதிக அளவிலான போலி வாகன உதிரி பாகங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டது. பஞ்சாபி பாக் பகுதியைச் சோ்ந்த மனாஸ் ஹுரியா சோதனையின்போது கைது செய்யப்பட்டாா். அவரிடம் இந்த உதிரிபாகங்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான உரிய ஆவணங்கள் இல்லை. கிடங்கில் இருந்து நூற்றுக்கணக்கான போலியான வாகன உதிரிபாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடா்புடைய மற்ற குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.