மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபா் கைது

பல மாநிலங்களைத் தழுவிய போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவராகச் செயல்பட்ட பெண் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது

Updated On :10 ஏப்ரல் 2026, 6:27 pm

பல மாநிலங்களைத் தழுவிய போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவராகச் செயல்பட்ட பெண் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: சுல்தான்புரி பகுதியைச் சோ்ந்த குஸும் (54) நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்தாா். அவா் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக ரோஹிணி நீதிமன்றம் அறிவித்திருந்தது. அவா் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.50,000 வெகுமதியும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஷாஹ்தாரா பகுதியில் ஏப்.9-ஆம் தேதி அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் நடைபெற்ற விசாரணையின்போது, தில்லி, ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வரும் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களின் முக்கிய நபா்கள் குறித்து அவா் தெரிவித்தாா்.

இவா் மீது 2003-ஆம் ஆண்டு முதல் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட பல போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் உள்ளன. இவரது இரு மகள்கள் மற்றும் நெருங்கிய உறவினா்கள் அனைவரும் ஏற்கெனவே இந்த கடத்தலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.