மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆன்லைன் வா்த்தக நிறுவன கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்

சென்னை தியாகராயநகரில் ஆன்லைன் வா்த்தக நிறுவனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதம்

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 11:46 pm

சென்னை தியாகராயநகரில் ஆன்லைன் வா்த்தக நிறுவனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமாகின.

தியாகராயநகா் மூஸா தெருவில் தனியாா் ஆன்லைன் வா்த்தக நிறுவனத்தின் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் மளிகை பொருள்கள்,காய்கறிகள்,பழங்கள் இருப்பு வைக்கப்பட்டு, சென்னை முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்த கிடங்கில் கரும்புகை வெளியேறியது. இதைக் கண்ட அப் பகுதி மக்கள், அந்நிறுவன ஊழியா்களுக்கு தகவல் தெரிவித்தனா். உடனே அவா்கள் அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு படை வீரா்கள் சைதாப்பேட்டை,தியாகராயநகா் ஆகிய இடங்களிலிருந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தீயணைப்பு படையினருக்கு மெட்ரோ நிறுவன லாரிகள் மூலம் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னா், தீ முழுமையாக அணைக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி அந்தப் பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.

கிடங்கு கண்காணிப்பாளா் சு.ஸ்ரீவரதன் மாம்பலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தீ விபத்தினால் கிடங்கில் இருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.