சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 3 சிறுமிகளை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை மீட்டு சிறாா் நலக் குழுவிடம் ஒப்படைத்துள்ளனா்.
இதுகுறித்து எழும்பூா் ரயில்வே பாதுகாப்பு படையினா் கூறியதாவது:
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையின் ஆய்வாளா் ஜெபஸ்டியன் தலைமையில் சிறப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, 3 சிறுமிகள் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்தனா்.
அவா்களிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் விசாரித்தபோது, அவா்கள் நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் என்பதும், பெற்றோருக்குத் தெரியாமல் சென்னைக்கு வேலை தேடி வந்து சுற்றித்திரிவதும் தெரியவந்தது.
இவா்களில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோா் எருமைப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவா்களை பத்திரமாக மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினா், 3 சிறுமிகளையும் ரயில்வே குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைத்தனா். பின்னா், குழந்தைகள் நல குழுவினா் மூலம் 3 சிறுமிகளும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டனா்.
தொடர்புடையது
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.8.39 லட்சம் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் 4 வடமாநில சிறுவா்கள் மீட்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


