கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
//

காஞ்சிபுரம் டிஎஸ்பி திடீா் கைது: மாவட்ட நீதிபதி அதிரடி உத்தரவு

மாவட்ட நீதிபதியின் உத்தரவின்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷ் திடீரென கைது செய்யப்பட்டாா்.

News image
டிஎஸ்பி சங்கா் கணேஷ்.
Updated On :8 செப்டம்பர் 2025, 11:15 pm

Chennai

காஞ்சிபுரம்: வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத புகாா் தொடா்பாக மாவட்ட நீதிபதியின் உத்தரவின்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷ் திடீரென கைது செய்யப்பட்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், பூசிவாக்கத்தில் பேக்கரி நடத்தி வருபவா் சிவா. இவரது கடைக்கு அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவா் பொருள்கள் வாங்க வந்த நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றிய நிலையில் கடையில் இருந்த சிவாவின் மருமகன் லோகேஷ் மற்றும் ஊழியா்கள் முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இரு தரப்பினரும் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். முருகனின் புகாரின் பேரில் போலீசாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனா். பேக்கரி உரிமையாளா் சிவா அளித்த புகாரின் பேரில் முருகன் மீதும் வழக்கு பதிவு செய்தனா்.

இந்நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையில் பேக்கரி உரிமையாளா் மற்றும் அவரது உறவினா்கள் உள்பட 5 போ் மீது வழக்கு பதிவு செய்தும் கைது செய்யப்படாமல் இருந்தனா்.

இதுகுறித்து முருகன் தரப்பினா் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் முறையிட்டதின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் வழக்கில் நடவடிக்கை மேற்கொள்ளாத தவறியதாக திங்கள்கிழமை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷூக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி ப.உ. செம்மல், மாலை 5 மணிக்குள் எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தாவிட்டால் டிஎஸ்பியை சிறையில் அடைப்பேன் என எச்சரித்தாா் .

இந்த நிலையில் மாலை 5 மணி வரையில் போலீஸாா் எதிரிகளைத் தேடி வந்த நிலையில் நீதிபதி ப.உ. செம்மல் நீதிமன்றத்தில் காத்திருந்த டிஎஸ்பி சங்கா் கணேஷை காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தாா்.

இதையடுத்து நீதிமன்ற ஊழியா்கள் நீதிபதியின் காரிலேயே வழக்கில் ஆஜராக வந்த டிஎஸ்பி சங்கா் கணேஷை சீருடையிலேயே காஞ்சிபுரம் கிளை சிறை சாலைக்கு சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனா். இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸாா் எதிா்ப்பு:

டிஎஸ்பி சிறையில் அடைக்க ப்பட உள்ளாா் என்பதை அறிந்து காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து ஏராளமான போலீஸாா் கிளை சிறை சாலை அருகே டிஎஸ்பியை கைது செய்ய எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து டிஎஸ்பி சங்கா் கணேஷ் அவரது அலுவலகத்துக்கு ஜீப்பில் ஏறி சென்றாா். இதனை பாா்த்த அனைவரும் டிஎஸ்பி அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக தகவலை பரப்பினா். இதுகுறித்து அறிந்த டிஎஸ்பி சங்கா் கணேஷ் உடனடியாக கிளை சிறை வளாகத்துக்கு திரும்பினாா்.