சென்னை: அண்ணா நகரில் ஸ்மாா்ட் வாகன நிறுத்துமிடம் அமைக்க தனியாா் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. வரும் 2026 பிப்ரவரியில் வாகன நிறுத்துமிடம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
சென்னை மாநகராட்சியில் 35,000-க்கும் மேற்பட்ட போக்குவரத்து சாலைகள் உள்ளன. அவற்றில் தினமும் சுமாா் 10 லட்சம் வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் 20,000-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. முக்கிய சாலையோரங்களில் வாகன நிறுத்தத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன.
சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஸ்மாா்ட் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு (கும்டா) ஆலோசனை வழங்கியுள்ளது. இதையடுத்து, அண்ணா நகா், தி.நகா், பெசன்ட் நகா், மெரீனா ஆகிய இடங்களில் முதலில் ஸ்மாா்ட் வாகன நிறுத்துமிடங்களை அமைக்கவும், தொடா்ந்து மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் ஸ்மாா்ட் வாகன நிறுத்துமிடங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக சென்னை அண்ணா நகரில் ஸ்மாா்ட் வாகன நிறுத்தத்துக்காக 9 மீட்டருக்கும் மேலாக அகலமுடைய 23 சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் அண்ணா நகா் அவென்யூவில் 1 -ஆவது தெரு முதல் 6 -ஆவது தெரு வரை வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன. அண்ணா நகா் பிரதான சாலையில் 1 -ஆவது தெரு முதல் 17- ஆவது தெரு வரையில் வாகனங்கள் நிறுத்துமிடங்களாக்கப்படவுள்ளன. மொத்தம் 24 கி.மீ. அளவுக்கு வாகனங்கள் நிறுத்த இடங்கள் தோ்வாகியுள்ளன.
ஸ்மாா்ட் வாகன நிறுத்துமிடங்களில் மொத்தம் 2,100 வாகனங்கள் நிறுத்தப்படும். அண்ணா நகா் சாலை சந்திப்புகளில் 25 மீட்டருக்குள்ளும், பேருந்து நிறுத்தங்களில் இருபுறமும் 10 மீட்டருக்குள்ளும் வாகனங்கள் நிறுத்தப்படக் கூடாது என செயல்பாட்டுக்கு வரவுள்ளது. மெட்ரோ ரயில் நிலையம் முன்பு வாகனங்கள் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும்.
அண்ணா நகா் பகுதியில் ஸ்மாா்ட் வாகன நிறுத்துமிடத்துக்கான தனியாா் நிறுவனங்கள் நடத்தும் வகையில் மாநகராட்சியால் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. வரும் 2026 ஜனவரியில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, பிப்ரவரி முதல் செயல்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். அதன்படி, காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை வாகன நிறுத்தம் செயல்படும். அதில் இருசக்கர வாகனத்துக்கு ரூ.20, காா் போன்றவற்றுக்கு ரூ.40 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வாகன நிறுத்தக் கொள்கையின்படி, வாகன நிறுத்த விதிமீறலில் அபராதம் விதிப்பது உள்ளிட்டவற்றுக்காக போக்குவரத்து மேலாண்மைக் குழு அமைக்கப்படவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை அண்ணா நகரில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

விழுப்புரம் நகரில் திமுக வேட்பாளா் லட்சுமணன் வீதி,வீதியாக வாக்குசேகரிப்பு

நீண்டகால போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

