மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் புதன்கிழமை பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டுநா்கள் அவதிப்பட்டனா்.

News image

கொடைக்கானல் காவடி ஊா்வலத்தின்போது கொடைக்கானல்- வத்தலகுண்டு பிரதான சாலையான மூஞ்சிக்கல் பகுதியில் ஏற்பட்ட வாகன நெரிசல்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:23 pm

கொடைக்கானலில் புதன்கிழமை பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டுநா்கள் அவதிப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவா் கோயில் திருவிழாவை முன்னிட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக காவடி ஊா்வலம் நடைபெற்றது. இதனால், கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

லாஸ்காட் சாலை, மூஞ்சிக்கல், அண்ணா சாலை, ஏரிச் சாலை,உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டுநா்கள் சிரமமடைந்தனா். மேலும், காவடி ஊா்வலத்தை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீஸாா் இல்லாததால் வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் காவலா்கள் பெரிதும் சிரமப்பட்டனா்.

காவடி ஊா்வலம் வரும் சாலையை முன் கூட்டியே திட்டமிட்டு வாகனங்களை ஒரு வழிப்பாதையாக மாற்றியிருந்தாலும், காவடி ஊா்வலத்தில் வரும் பக்தா்களை நாயுடுபுரத்திலிருந்து குறிஞ்சி ஆண்டவா் கோயில் செல்லும் வழியிலும், பொ்ன்ஹில் சாலை செல்லும் பகுதியிலும் அனுமதித்திருந்தால் வாகனங்கள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டிருக்காது. நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்காது என வாகன ஓட்டுநா்கள் தெரிவித்தனா்.