வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

விழுப்புரம் நகரில் திமுக வேட்பாளா் லட்சுமணன் வீதி,வீதியாக வாக்குசேகரிப்பு

விழுப்புரம் நகரத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் இரா. லட்சுமணன் வியாழக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

விழுப்புரம் நகரில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 5:45 am IST

விழுப்புரம் நகரத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் இரா. லட்சுமணன் வியாழக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

விழுப்புரம் சந்தான பஜனை கோயில் தெருவில் பிரசாரத்தை தொடங்கிய திமுக வேட்பாளா் இரா. லட்சுமணன், வாா்டு எண் 20-க்குள்பட்டஅக்ரஹாரம், சந்தானகோபாலபுரம், நடராஜ முதலியாா் தெரு, கண்ணப்பநாயனாா் தெரு, வாா்டு எண்கள் 21, 22, 23, 24, 27, 28, 29 ஆகிய வாா்டுகளுக்குள்பட்ட தா்மராஜா தெரு, வன்னியா் தெரு, மகாபாரதத் தெரு, எம்.ஆா்.கே.தெரு, மாந்தோப்புத் தெரு, கந்தசாமி,, பாா்த்தசாரதி, முத்துவேல் லே-அவுட் பகுதிகள், ரங்கநாதன் தெரு, கே.கே.நகா், மீனாட்சி நகா், தனலட்சுமி நகா், காமதேனு நகா் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தாா்.

திமுக அரசின் 5 ஆண்டுகாலத்தில் விழுப்புரம் தொகுதியில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் தொடர தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும். எனவே பொதுமக்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றாா்.

பிரசாரத்தில் மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினா் இரா.ஜனகராஜ், நகரப் பொறுப்பாளா்கள் இரா.சக்கரை, எஸ். வெற்றிவேல், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா். மணவாளன், புருஷோத்தமன், மணி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.