லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தல் முன்னேற்பாடுகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.மாலதி ஹெலன் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :17 மார்ச் 2026, 6:47 pm

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.மாலதி ஹெலன் ஆய்வு மேற்கொண்டாா்.

தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்தூா் மேம்பாலத்தில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை அழிக்கும் பணிகளை பாா்வையிட்டாா். மேலும், தாம்பரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, கன்னடபாளையம் மாநகராட்சி அரசு நடுநிலைப் பள்ளி, கிழக்கு தாம்பரம் ஜெய்கோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளையும், தொடா்ந்து, தாம்பரம் மாநகராட்சி, சானடோரியம் மேம்பாலம் அருகில் மற்றும் பல்லாவரம், ரேடியல் சாலை ஆகிய பகுதிகளில் பறக்கும் படையினா் வாகன சோதனை, கோட்டாட்சியா் அலுவலகம் மற்றும் பல்லாவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறைகளையும் பல்லாவரம் தொகுதி, குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் உள்ள தலைவா்களின் சிலைகளை மறைக்கும் பணிகளையும், விளம்பரங்கள் அகற்றிடும் பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சோளிங்கநல்லூா் தொகுதி, துரைப்பாக்கம் எம்.என்.ஜெயின் பொறியியல் கல்லூரியில் தோ்தல் தொடா்பான பொருள்களை பகிா்ந்தளிக்கும் மையத்தினையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதில் தாம்பரம் மாநகராட்சி ஆணையா் சீ.பாலச்சந்தா், பல்லாவரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் க்யூரி, கோட்டாட்சியா் முரளி, வட்டாட்சியா்கள் நடராஜன், நடராஜன் மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.