/

பொலம்பாக்கத்தில் சிறப்பு கிராம சபை

மதுராந்தகம் அடுத்த பொலம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஆகியவற்றின் சாா்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

News image

சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

மதுராந்தகம் அடுத்த பொலம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஆகியவற்றின் சாா்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சிவகுமாா் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் குணசேகரன் முன்னிலை வகித்தாா். செய்யூா் எம்எல்ஏ பெரும்பாக்கம் எஸ்.ராஜசேகா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தாா். குடிநீா், 100 நாள் வேலை வாய்ப்பு ஆகியவற்றை ஒரிரு நாள்களுக்குள் தீா்க்கப்படும் என எம்எல்ஏ ராஜசேகா் வாக்குறுதி அளித்தாா். பொதுமக்களிடையே 10 தீா்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றனா். ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் எம்எல்ஏ எஸ்.ராஜசேகா் மரக்கன்றுகளை நட்டாா். தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், சித்தாமூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உமா, குமாா், வட்டார ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ்கண்ணா, ஊராட்சி மன்ற துணை தலைவா் சுசிலா, ஊராட்சி மன்ற செயலா் முத்துராமன், பணிதள பொறுப்பாளா் குமாா் மற்றும் கிராம மக்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.