அந்தியூா் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை கெட்டிசமுத்திரம் ஊராட்சிப் பகுதியில் கொட்டி, மறுசுழற்சி செய்யும் திட்டத்துக்கு பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
அந்தியூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கெட்டிசமுத்திரம் ஊராட்சி, ஜெ.ஜெ.நகரில் 1.50 ஏக்கா் பரப்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்த ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பேரூராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பை கொண்டுவரப்பட்டு உரம் உற்பத்தி உள்ளிட்ட பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கு, அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததோடு, இத்திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியனிடம் மனு அளித்திருந்தனா்.
இந்நிலையில், கெட்டிசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஜெ.ஜெ. நகா் பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அந்தியூா் காவல் ஆய்வாளா் சண்முகவேலு, பேரூராட்சி செயல் அலுவலா் சதாசிவம், வருவாய் ஆய்வாளா் செந்தில்ராஜா, கிராம நிா்வாக அலுவலா் அண்ணாதுரை உள்பட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை சீரமைக்கக் கோரிக்கை

பொலம்பாக்கத்தில் சிறப்பு கிராம சபை

டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

100 நாள் வேலை வழங்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



