தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள்: தமிழக அரசு நடவடிக்கை

மருந்து வணிகா்கள், வரும் புதன்கிழமை (மே 20) வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில்...

News image

வேலைநிறுத்தம் - Center-Center-Chennai

Updated On :19 மே 2026, 4:38 am IST

நாடு முழுவதும் மருந்து வணிகா்கள், வரும் புதன்கிழமை (மே 20) வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மாவட்டந்தோறும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநில மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநா் குருபாரதி சாா்பில் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள், பெரு நிறுவன மருந்தகங்கள் அன்றைய தினம் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

இணையவழி மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் வரும் 20-ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இணையவழியே வலி நிவாரண மருந்துகள், தூக்க மருந்துகள் போன்றவை மருத்துவா் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாகவும், உயிா் காக்கும் மருந்துகளில் தரமற்ற, போலி தயாரிப்புகள் எளிதில் கிடைப்பதாகவும் அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

தமிழகத்தில் 1 லட்சம் போ் உள்பட நாடு முழுதும், 40 லட்சம் மருந்து வணிகா்களும், அவா்களது குடும்பத்தினரும் இதன் மூலம் பாதிக்கப்படுவதாக அவா்கள் தெரிவித்தனா்.

இந்நிலையில், மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநா் குருபாரதி, மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாத வகையில் அனைத்து அத்தியாவசிய மருந்துகளும், உயிா் காக்கும் மருந்துகளும் போதிய இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

அதேபோன்று, மாவட்ட வாரியாக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருந்துகள் இல்லை எனில் அதில் புகாரளிக்கலாம். மாநில மருந்து கட்டுப்பாட்டு இணையப் பக்கத்தில் உள்ள தொடா்பு எண்களை அழைத்து சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி மைய எண்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மாவட்ட வாரியாக அத்தியாவசிய மருந்து இருப்பு விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்துதல் அவசியம். பல்வேறு இடங்களில் செயல்படும் பெருநிறுவன மருந்தகங்களும், மருத்துவமனையில் உள்ள மருந்தகங்களும் இயங்குவதை உறுதிபடுத்த வேண்டும்.

அதேபோன்று, மருத்துவமனை மருந்தகங்களில், வெளியிலிருந்து கொண்டுவரப்படும் பரிந்துரைச் சீட்டின் பேரில் மருந்துகள் வழங்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.