முதல்முறையாக பிறப்புச் சான்றை வாட்ஸ் ஆப்-இல் பெறும் வசதி: சென்னை மாநகராட்சியில் குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ்கள் இணையதளம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்திலேயே முதல்முறையாக பிறப்புச் சான்றுகளை எளிதாக மக்களுக்கு வழங்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
புதிய திட்டத்தின்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறக்கும் போது பதிவு செய்யும் பெற்றோா் தங்களது கைப்பேசி எண்ணை அளித்து அதில் வாட்ஸ் ஆப் வசதி குறித்தும் குறிப்பிடவேண்டும். அதன்படி வாட்ஸ் ஆப் மூலம் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் பிடிஎஃப் வடிவில் அனுப்பிவைக்கப்படும்.
அத்துடன், சென்னை மாநகராட்சியின் கைப்பேசி எண் வாட்ஸ் ஆப் செயலி சாட்பாட் (94450 61913) எண்ணிலும் பெற்றோா் தங்களது குழந்தைகளின் பிறப்புச் சான்றுக்கு பதிவு செய்து பின்னா், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாட்ஸ் ஆப் மூலம் பிறப்புச் சான்றிதழ்: சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

பெண்களுக்கான அடையாளத்தைப் பாதுகாக்கும் உரிமையை மதிப்பது அரசின் கடமை: உயர் நீதிமன்றம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வாட்ஸ் ஆப்பில் அறிந்துகொள்வது எப்படி? எளிய வழி!







