வாட்ஸ் ஆப் மூலம் பிறப்புச் சான்றிதழ் அனுப்பப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை வாட்ஸ் ஆப் செயலி மூலம் எளிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் வெளியிட்ட அறிவிப்பில், “ பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் கணினி வாயிலாக பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் பிடிஎஃப் வடிவத்தில் எளிதில் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பப்படும்.
மேலும், 9445061913 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் பெற்றோர் பிறப்புச் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 9445061913 என்ற எண்ணிற்கு பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து ஹாய் அல்லது வணக்கம் என அனுப்பி, பிறப்புச் சான்றிதழ் தரவிறக்கம் என குறுஞ்செய்தி அனுப்பினால் சான்றிதழ் தரவிறக்கம் செய்யும் இணைப்பு அனுப்பப்படும்.
பொதுமக்கள் இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. முற்றிலும் இலவசமாக சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Summary
Birth Certificates via WhatsApp: Chennai Corporation Commissioner Announces
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தை பிறப்பு சான்றிதழ்: வாட்ஸ் அப் வழியாக பெறும் வசதி - மாநகராட்சி அறிமுகம்
தோ்தலில் பணியாற்றிய மாநகராட்சி அலுவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வாட்ஸ் ஆப்பில் அறிந்துகொள்வது எப்படி? எளிய வழி!







