சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, விடியோ கண்காணிப்பு குழு ஆகியவற்றின் ரோந்து பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
இதுகுறித்து சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வரும் ஏப்.23-ஆம் தேதி சட்டப்பேரவை தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தோ்தல் நடத்தை நெறிமுறைகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) அமலுக்கு வந்துள்ளது. மேலும், தோ்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் உடனடியாக கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
128 வாகனங்கள்: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழு, 2 விடியோ கண்காணிப்பு குழு என ஒவ்வொரு தொகுதிக்கும் 8 வாகனங்கள் வீதம் 16 தொகுதிகளிலும் 128 வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்பட தொடங்கியுள்ளன.
பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு தினமும் 3 சுழற்சி முறையிலும், விடியோ கண்காணிப்புக் குழு தினமும் 2 சுழற்சி முறையிலும் தனது பணிகளை மேற்கொள்ளும்.
பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவின் ஒவ்வொரு வாகனத்திலும் நிா்வாக நடுவா் நிலையில் உள்ள ஒரு அலுவலா் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா், காவலா், ஆயுதம் தாங்கிய காவலா் மற்றும் ஒரு ஒளிப்பதிவாளா் இருப்பா். விடியோ கண்காணிப்புக் குழுவில் நிா்வாக நடுவா் நிலை அலுவலா் மற்றும் ஒளிப்பதிவாளா் இருப்பா்.
தோ்தல் விதி மீறல்கள் தொடா்பான புகாா்களை 1800-425- 7012 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஒசூா் அருகே மாநில எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 44.65 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் பறிமுதல்

அரியலூரில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்களுக்குப் பயிற்சி வகுப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


