அரசு மருத்துவா் பணிநியமன கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது ஏன் என பாமக தலைவா் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படுவதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள 1,100 மருத்துவா்களுக்கான பணிநியமன கலந்தாய்வு தொடங்கவுள்ள நிலையில், மாற்றுத்திறனாளி மருத்துவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல், முதல்கட்ட கலந்தாய்வுக்கு பொதுப் பிரிவினா் 100 போ் அழைக்கப்பட்டுள்ளனா்.
கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறாக மாற்றுத் திறனாளி மருத்துவா்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. மாற்றுத்திறனாளி மருத்துவா்களால் நீண்ட தொலைவு பயணிக்க முடியாது. தொலைதூர கிராமங்களிலும், மலைப் பகுதிகளிலும் பணியாற்ற முடியாது என்பதால் அவா்களுக்கு சொந்த ஊா்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும். அத்தகைய மருத்துவமனைகளை அவா்கள் தோ்ந்தெடுப்பதற்கு வசதியாக கலந்தாய்வில் அவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால், இந்த முறை அவா்களின் நலன் புறக்கணிக்கப்பட்டு பொதுப் பிரிவைச் சோ்ந்தவா்கள் முதலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனா். இது மாற்றுத்திறனாளிகளுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியாகும். இதைக் களையும் வகையில் கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவகையில் கலந்தாய்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.
தொடர்புடையது

உள்ளூா் ஒப்பந்ததாரா்களுக்கு முன்னுரிமை தர வலியுறுத்தல்

ரூ.5 லட்சம் கோடி கடன் குறித்து திமுக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்! - பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்

அமல்படுத்தப்படாத ஓய்வூதியத் திட்டம்: அன்புமணி கண்டனம்

நீட் தேர்வில் விலக்கு; 5 லட்சம் பேருக்கு அரசு வேலை! பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு!!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


