பாமகவின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் அன்புமணி இன்று (ஏப்.1) வெளியிட்டார். அதில், 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் இருக்கும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தல் வேலைகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டளி மக்கள் கட்சி தருமபுரி உள்பட 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாட்டளி மக்கள் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அங்கு பாமகவின் தேர்தல் வாக்குறுதிகளை அவர் வெளியிட்டார்.
அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆளும் கட்சியான திமுக, எங்கள் வாக்குறுதியை காப்பியடிக்கின்றனர். அவர்கள் (திமுக) 505 வாக்குறுதிகள் கொடுத்து அதில் வெறும் 66 மட்டுமே நிறைவேற்றியிருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகனும் கிடையாது, கதாநாயகியும் கிடையாது. அது குரூப் டான்ஸர் போன்றது”என்றார்.
பாமகவின் தேர்தல் வாக்குறுதிகள்
• 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்
• 2026 - 2027 இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
• கிராம நிர்வாக அலுவலர் உள்பட குரூப்-4 பணிகளுக்கு 35 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள்
• குரூப்-2 பணிகளுக்கு 10,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.
• வகுப்புக்கு ஒரு ஆசிரியர் வீதம் நிரப்பவும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அதில், முதற்கட்டமாக 40,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
• காவல் துறை, தீயணைப்புத்துறையில் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு.
• போக்குவரத்துத்துறையில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு.
• மின்சாரத்துறையில் 16,000 பேருக்கு வேலை வாய்ப்பு.
• மருத்துவத்துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 7000 பேருக்கு வேலை வாய்ப்பு.
• நீட் நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் விலக்கு பெறப்படும்.
Summary
PMK President Anbumani released the party's election manifesto today (April 1). In it, he stated that government jobs would be provided to 500,000 people.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமாவளவனைப் பாராட்டிய அன்புமணி! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றாகப் போராடவும் உறுதி!!
பாமக தேர்தல் அறிக்கை! அன்புமணி நாளை வெளியீடு!

பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு! முதல் பட்டியலில் 3 பேர்!

மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


