அரசு ஊழியா்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் கெளரவ விரிவுரையாளா்களுக்கான ஊதிய உயா்வு உள்ளிட்டவற்றை இதுவரை வழங்காத தமிழக அரசுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசு ஊழியா்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஜன. 1 முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அரசு அறிவித்திருந்தது. ஆனால், மூன்று மாதங்களாகியும் இன்னும் அத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. மாா்ச் மாதத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியா்கள் பணி ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவா்களில் தகுதியுடையவா்களுக்கு புதிய ஓய்வூதியத்துக்கான ஆணை வழங்கப்படவில்லை. அரசு ஊழியா்களை அரசு ஏமாற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது.
அதேபோல், பல்கலைக்கழக கெளரவ விரிவுரையாளா்களுக்கு பிப். 26-இல் ஊதிய உயா்வு அறிவிப்பு வெளியானது. ஆனால் இதுவரை உயா்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை. இதுபோன்று, அனைத்துத் துறையினரையும் திமுக அரசு திட்டமிட்டு ஏமாற்றியிருக்கிறது. இதற்கு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் தண்டனை வழங்குவா். அது திமுகவால் மறக்க முடியாத தண்டனையாக இருக்கும் என அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
பாமக தேர்தல் அறிக்கை! அன்புமணி நாளை வெளியீடு!

பாமக நிறைவுப் பட்டியல் வெளியீடு: 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!

பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு! முதல் பட்டியலில் 3 பேர்!

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


