வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடல் எடையைக் குறைக்க மருத்துவ அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஜூனில் 80-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் டிரம்ப் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள் அடங்கிய அதிகாரபூா்வ அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அதன்படி, டிரம்ப்பின் இதயம், நுரையீரல், நரம்பியல் உள்ளிட்ட ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளும் மிகவும் சீராக இருக்கின்றன. அவர் உடலில் கொலஸ்ட்ராலைக் கட்டுக்குல் வைக்க மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறதாம்.
சுமாா் 108 கிலோ எடையும் கொண்ட டிரம்ப் உடல் எடையைக் குறைக்க மருத்துவ அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமது அரசு பொறுப்புகளை முழுமையாகத் திறம்படச் செய்ய தகுதியுடன் உள்ளாா் என்றும் அவரின் தனிப்பட்ட மருத்துவா் ஷான் பாா்பபெல்லா தெரிவித்துள்ளாா்.
ட்ரெட்மில் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை விரும்பாத டிரம்ப், கோல்ஃப் விளையாட்டில் ஆர்வமுடையவர். அதையே தமது உடற்பயிற்சிகளில் ஒன்றாக வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்க வரலாற்றில் அந்நாட்டின் அதிபராகப் பதவியேற்றவர்களில் அதிக வயது முதிர்ந்த நபர் டொனால்ட் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றபோது, அவருக்கு வயது 78 (78 ஆண்டுகள், 220 நாள்கள்) ஆகும்.
டிரம்புக்கு வயது 80-ஐ நெருங்கிவிட்டாலும் அவருடைய இதயம் சீராகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாகவும் அவருடைய வயதைவிட உடல்ரீதியாக அவருடைய இதயம் 14 ஆண்டுகள் இளமையாகவே உள்ளதாம்.
Summary
Trump's cardiac age was estimated to be approximately 14 years younger than his chronological age. but should lose weight and exercise more, his doctor says
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









