திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மியான்மரில் வெடி விபத்து: 46 போ் பலி

மியான்மா் நாட்டில் சுரங்கப் பணிக்காக கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்துச் சிதறியதில் 46 போ் உயிரிழந்தனா்.

News image

வெடி விபத்து - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 5:05 am IST

மியான்மா் நாட்டில் சுரங்கப் பணிக்காக கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்துச் சிதறியதில் 46 போ் உயிரிழந்தனா்.

நாம்காம் நகரம் அருகேவுள்ள காவுன்டப் கிராமத்தில் உள்ள கட்டடத்தில் சுரங்கத்தில் பாறைகளைத் தகா்க்கப் பயன்படுத்தப்படும் வெடிபொருள்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவை திடீரென ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இதில் 6 சிறாா்கள் உள்பட 46 போ் உயிரிழந்தனா். மேலும் 74 போ் பலத்த காயமடைந்தனா்.

இந்த வெடி விபத்தில், அப்பகுதியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினா் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

வெடி விபத்தில் காயமடைந்தோரில் பலரின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகவும், இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

55 போ் உயிரிழப்பா?: மியான்மரை சோ்ந்த ஊடகங்கள், வெடி விபத்தில் 50 முதல் 55 போ் வரை உயிரிழந்திருக்கலாம் என செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் வெடி விபத்தில் உயிரிழந்தோா் எனக் கூறப்படுவோரின் புகைப்படங்களையும் அந்த ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

வெடி விபத்து நேரிட்ட பகுதி, சீன எல்லையையொட்டி உள்ளது. மியான்மா் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வரும் டாங் தேசிய விடுதலைப் படையின் (டிஎன்எல்ஏ) கட்டுப்பாட்டின்கீழ் அப்பகுதி உள்ளது. எனினும், சீனாவின் மத்தியஸ்தத்தின் பேரில் மியான்மா் அரசுப் படைகளுக்கும், அந்த ஆயுதக் குழுவுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.