ஈரானியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்கமாட்டோம் என ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் காலிஃபா தெரிவித்துள்ளார்.
ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் காலிஃபா அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் தொடர்பான விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஈரான் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவது உறுதியாகும் வரை, அமெரிக்காவுடன் எந்த ஒப்பந்தத்திற்கும் நாங்கள் ஒப்புதல் அளிக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஈரான் வெளியுறவுத் துறை அதிகாரிகள் எதிரியின் வார்த்தைகள் அல்லது வாக்குறுதிகளை நம்புவதில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போர்நிறுத்த முன்மொழிவு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான நிபந்தனைகள் கொண்ட முன்மொழிவை ஈரானிடம் அளித்ததாக நேற்று (மே 29) அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. அதில் என்ன அடங்கியிருந்தது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
அமெரிக்காவுடனான அனைத்து ஒப்பந்தங்களிலும் பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுவதையும், வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவிப்பதையும் முக்கிய உரிமையாக உறுதிசெய்ய ஈரான் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் ஏற்படும் தாமதம் என்பது ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான காலத்தை மேலும் தாமதமாக்கும் என்றும், இதனால் உலகம் முழுக்க பல நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், ஈரான் அணுஆயுதக் கொள்கைகளை தளர்த்திக் கொள்ள வேண்டும் என்பதும் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதுமே டொனால்ட் டிரம்ப் வைக்கும் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. ஆனால், டிரம்ப்பின் கோரிக்கைகள் மீது ஈரான் முன்பே சந்தேகம் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அணுசக்தி திட்டம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் முன்பு 12 பில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளை அமெரிக்கா விடுவிக்கவேண்டும் என்று ஈரான் கூறுகின்றது.
இதுபற்றிப் பேசிய டிரம்ப், “எனக்கு அவசரம் இல்லை. நாம் விரும்புவது கிடைக்கவில்லை என்றால், நாம் வேறு முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
Summary
Dont trust enemy's promises says Iran
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்காவில் கால்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்க ஈரான் அணிக்கு விசா அனுமதி!
அதிபர் டிரம்ப்புக்கு பின்னடைவு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் தீர்மானம் நிறைவேற்றம்!

ஈரான் தாக்கிய சில மணிநேரங்களில்! குவைத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்!






