திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

News image

ரஷியாவிற்கு எதிராக டிரோன்களை தயார்படுத்தும் உக்ரைன் வீரர்கள் - AP

Updated On :31 மே 2026, 5:20 pm IST

ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

ரஷிய எரிசக்தி மையங்கள் மீது இன்று (மே 31) காலை வரை உக்ரைன் தாக்குதல்களை நடத்தியதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கிரெம்ளின் பகுதியில் உள்ள ஒரு முக்கிய அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில் அதனை அந்நாடு மறுத்துள்ளது.

ரஷியாவின் தென்மேற்கில் உள்ள ரோஸ்டோவ் பகுதியின் எரிபொருள் சேமிப்பு மையத்தில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல் காரணமாக அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சரடோவ் மாகாணத்தில், டிரோன் தாக்குதல்களின் மூலம் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சமீப காலமாக, ரஷியாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் அதிகளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ரஷியா, உக்ரைன் மீது நடத்தி வரும் 4 ஆண்டு காலத் தாக்குதல்களுக்கு நிதியளிப்பதில் எரிசக்திக் துறையே முக்கியப் பங்காற்றி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ரஷியா ஆக்கிரமித்த ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையத்தை உக்ரைன் டிரோன் மூலம் தாக்கியதாக ரஷியா தெரிவித்துள்ளது. அதேபோல, ரஷியாவின் ரோசாட்டம் அணுமின் நிலையத்திலும் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உக்ரைன் வெளியிட்ட அறிக்கையில். தாங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தைக் கடைப்பிடிப்பதாகவும், எந்த அணு உலை மற்றும் எர்சக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

அப்படியான தாக்குதல்களின் விளைவுகளைப் பற்றி அறிந்திருப்பதாகவும் இது ரஷியாவின் தந்திரம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரஷியாவின் முழுமையான ஆக்கிரமிப்புக்குப் பிறகு, ஸபோரிஷியா அணுசக்தி மையம் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவது அச்சத்தை அதிகரித்துள்ளது.

Summary

Ukraine Attacks Russian Energy Centers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.