கடுமையான போரால் நிலங்களை இழந்த விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். காலியான தகர டின்களில் காய்கறிச் செடிகளை வளர்த்து சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
போரின்போது, உணவுப் பொருள்கள் வந்து காலியான டின்களை பழைய இரும்புச் சாமான் கடைக்குப் போட்டு பேரீட்சம் பழம் வாங்கி சாப்பிட்டுவிடாமல், அதைக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டுள்ளனர்.
விவசாயிகளின் பெருமைகளைப் பேச மறந்தாலும், அவர்களது வாழ்வு என்றுமே மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவே திகழ்ந்து வருகிறது.
அந்த வகையில்தான், தென்கிழக்கு காஸா நகரில், பாலஸ்தீனிய விவசாயிகள், தங்களுக்கு உதவிப் பொருள்கள் வந்து காலியான டின்களில் மண்ணை நிரப்பி அதில் காய்கறிச் செடிகளை பயிரிட்டனர்.
கீரைகள், புதினா, காய்கறிகளை நடவு செய்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார்கள். தங்களது நிலங்கள் போரால் மோசமாக சீர்குலைந்து போன நிலையில், அவற்றை மீண்டும் சீரமைக்கும் வசதிகள் இல்லாதது கவலை அளித்தது. அதே வேளையில், மாற்று வழியை சிந்தித்த போது கிடைத்ததுதான் இந்த உக்தி.
தங்களது முகாம்கள் இருக்கும் இடங்களுக்கு அருகே டின்களை அடுக்கி காய்கறிகளை வளர்த்து வருகிறோம், விவசாயப் பணிகளின்போது திடீரென தாக்குதல் நடக்கும். அப்போது சென்று மறைந்துகொள்வோம். தாக்குதல் சப்தம் நின்றதும் மீண்டும் பணிகளை தொடங்குகிறோம் என்கிறார்கள்.
Summary
Land-locked Gaza farmers revolt! Record-breaking vegetable plants in tins
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நள்ளிரவில் காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

தஞ்சாவூா் பெரிய கோயில் மதில்சுவா் தூய்மைப் பணி பாதியில் நிறுத்தம்

இஸ்ரேல் தாக்குதலில் புதிய தலைவர் கொலை! உறுதி செய்த ஹமாஸ்!

கருகிய மிளகாய் செடிகள்: விவசாயிகள் கவலை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



