திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இஸ்ரேல் தாக்குதலில் புதிய தலைவர் கொலை! உறுதி செய்த ஹமாஸ்!

இஸ்ரேல் தாக்குதலில் புதிய ஆயுதப்படைத் தலைவர் கொல்லப்பட்டதை ஹமாஸ் படையினர் உறுதி செய்துள்ளனர்...

News image

கொல்லப்பட்ட ஹமாஸ் ஆயுதப்படைத் தலைவர் முகமது ஓடேவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் பாலஸ்தீனர்கள்... - ஏபி

Updated On :27 மே 2026, 9:43 pm IST

இஸ்ரேலின் தாக்குதலில், தங்களின் புதிய ஆயுதப்படைத் தலைவர் கொல்லப்பட்டதை ஹமாஸ் படையினர் உறுதி செய்துள்ளனர்.

காஸாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் ஆயுதப்படையின் புதிய தலைவரான முகமது ஓடே கொல்லப்பட்டதாக, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஹமாஸ் ஆயுதப்படைத் தலைவர் முகமது ஓடே மற்றும் அவரின் மனைவி, 2 குழந்தைகள் உள்பட 5 பேர் செவ்வாய்க்கிழமை அன்று நடத்தப்பட்ட இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்து ஹமாஸ் அமைப்பு இன்று (மே 27) அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலானது இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய நாள் நடத்தப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கொல்லப்பட்ட முகமது ஓடே மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு இன்று இறுதிச் சடங்கு நடைபெற்றது.

கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீது ஹமாஸ் அமைப்பின் கொடிகள் போர்த்தப்பட்ட ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்டன. இந்த இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, 2 வாரங்களுக்கு முன்பு ஹமாஸ் ஆயுதப்படையின் முன்னாள் தலைவர் இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் கடந்த மே 15 அன்று இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து, ஆயுதப்படைத் தலைவராகப் பதவியேற்ற ஓடே, அக்டோபர் 7 தாக்குதலின்போது உளவுத்துறையின் தலைவராகப் பணியாற்றியதாக, இஸ்ரேல் அரசு குற்றஞ்சாட்டுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Hamas confirmed that their new military commander was killed in an Israeli attack.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.